You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நான்காவது மாடியிலிருந்து தவறி முதல் மாடியில் விழுந்த குழந்தை மீட்கப்பட்ட காட்சி
சென்னை அருகே நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை மீட்க அக்கம்பக்கத்தினர் போராடும் காட்சி இது.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து ஒரு கைக்குழந்தை தவறி கீழே விழுந்தது.
முதல் தளத்தில் இருந்த `ஷீட்`டின் மீது விழுந்த குழந்தை எந்த நிமிடமும் தவறி கீழே விழும் நிலையில் இருந்தது.
அக்குடியிருப்பில் இருந்த மக்கள், அக்குழந்தை சரிந்து கீழே விழுந்தால் பிடித்துக்கொள்ள ஒரு விரிப்பைப் பிடித்தபடி காத்திருந்தனர்.
ஆனால் அங்கிருந்த சிலர் பால்கனி வழியாக மேலேறி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இப்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக அதனை மீட்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
4-ஆவது மாடி பால்கனியில் இருந்து குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, குழந்தை தவறி விழுந்ததாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)