'நான் நரகத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்' - இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலையான பாலத்தீன கைதி

'நான் நரகத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்' - இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலையான பாலத்தீன கைதி
பிரசுரிக்கப்பட்டது

இந்தக் காணொளியில் இருப்பது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த காட்சி. செஞ்சிலுவை சங்கத்திடம் 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்தது. அவர்களை இஸ்ரேலிடம் செஞ்சிலுவை சங்கம் சேர்த்தது.

"நான் நரகத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன், நாங்கள் நரகத்திலிருந்து வெளியேறிவிட்டோம். அவர்கள் எங்களை அத்துமீறி அடித்தார்கள். எங்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். திடீரென சிறைக்குள் நுழைந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவார்கள். கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவார்கள், உணவு இல்லை. இனிப்பு, உப்பு இல்லை. ஒன்றுமே இல்லை." என்கிறார் விடுதலையான பாலத்தீன கைதி அப்தெலாஜிஸ்.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டத்தில் 33 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது. ஹமாஸ் கூற்றுப்படி, ஒரு பணயக் கைதிக்கு ஈடாக 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)