ஜேடி வான்ஸ் அமெரிக்க துணை அதிபராவதை இந்த இந்திய கிராமம் கொண்டாடுவது ஏன்?
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மார்கொண்டபாடு கிராமத்தில் உள்ள சிலுக்கூரி குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம் இது. அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜேடி வான்ஸ் மனைவியான உஷா வான்ஸின் மூதாதையர்கள் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
உஷாவின் மூதாதையர்கள் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சாய்புரம் கிராமத்தில் இருந்து அப்போதைய மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த மார்கொண்டபாடு கிராமத்துக்கு குடிபெயர்ந்ததாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் அதிகாரமிக்க இரண்டாவது பெண்ணாக உஷா மாறியுள்ளது சிலுக்கூரி குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு கோதாவரியில் உள்ள வட்லூரு கிராமத்தில் சிலரும் இதனை கொண்டாடினர். சிலுக்கூரி குடும்பத்தினர் யாரும் இப்போது அங்கே இல்லை. உஷாவின் தந்தை வழி தாத்தாவின் தம்பியான சிலுக்கூரி சுப்ரமணிய சாஸ்திரி அந்த கிராமத்தில் முன்பு வசித்ததாக அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



