சந்திரபாபு, நிதிஷ் குமாரை மோதி எப்படி சமாளிக்கப் போகிறார்?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி தலைமையிலான அரசு 3வது முறையாக பதவியேற்கிறது.
சந்திரபாபு, நிதிஷ் குமாரை மோதி எப்படி சமாளிக்கப் போகிறார்?
பிரசுரிக்கப்பட்டது

நரேந்திர மோதி தலைமையிலான அரசு 3வது முறையாக பதவியேற்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆந்திராவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

ஆனாலும், இந்த கட்சிகளுக்குள் பெரியளவிலான சித்தாந்த பிணைப்பு கிடையாது. இதுவே இந்த ஆட்சியின் நிலைத்தன்மை மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த கூட்டணியில் 16 மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) ஆகியவை முக்கியமானவை.

இருப்பினும் 7 தொகுதிகளை வென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், ஐந்து இடங்கள் உள்ள லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி) ராம்விலாஸ் பாஸ்வான் பிரிவும், உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களில் வென்று நாடாளுமன்றத்தில் நுழைந்த ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்.எல்.டி) ஆகியவையும் பா.ஜ.க-வுக்கு முக்கியமானவை.

இதில் சிவசேனாவைத் தவிர இந்த கட்சிகளுடன் பா.ஜ.க-வின் உறவு அவ்வளவு சுமுகமாக இருந்ததில்லை.

ஜே.டி.யு-வும், தெலுங்கு தேசம் கட்சியும் கடந்த காலங்களில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளாக இருந்துள்ளன. சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவை விலகின.

இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கட்சிகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றாக வைத்திருப்பது மோதிக்கு சவாலாக இருக்கக்கூடும். பா.ஜ.க அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)