காணொளி: ‘இரானுடன் விரைவில் மிகச்சிறந்த உடன்பாடு’ - டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: ‘இரானுடன் விரைவில் மிகச்சிறந்த உடன்பாடு’ - டிரம்ப் கூறியது என்ன?
காணொளி: ‘இரானுடன் விரைவில் மிகச்சிறந்த உடன்பாடு’ - டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

“இரானுடன் மிகச் சிறந்த உடன்பாட்டை எட்டியுள்ளோம். ஆவணங்கள் இறுதிப்படுத்தப்பட்டு சில நாட்களில் நிறைவடையும். ஐரோப்பாவில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.” என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

“இது மிகச் சிறந்த விஷயம். பங்குச் சந்தை ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஒப்பந்தத்தை பங்குச் சந்தை வரவேற்கிறது. ஒப்பந்தம் பிடிக்கவில்லை என்றால் சந்தை சரிந்திருக்கும். ஆனால் தற்போது அது உயர்ந்தே உள்ளது.

மிக முக்கியமாக, இரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்காது என்ற ஒப்பந்தத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்காகத்தான் இந்த முழு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இது மிகப் பெரிய சாதனை. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆவணங்களும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். எல்லாம் நன்றாக உள்ளது. இது விரைவில் முடிவடையும்.” என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு