You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா: நேரலையில் இருந்த போது சக செய்தியாளர் மரணத்தை அறிந்த செய்தியாளர் கண்ணீர்
இது தன்னுடன் பணியாற்றும் சக செய்தியாளர் கொல்லப்பட்ட செய்தியை மற்றொரு செய்தியாளர் கண்ணீருடன் அறிவித்த காட்சி.
பாலத்தீன அரசு தொலைக்காட்சி செய்தியாளர் முகமது அபு ஹத்தாப், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் வீட்டின் மீது நடந்த தாக்குதலில் அவரது குடும்பத்தினர் சிலரும் இறந்தனர். அதுகுறித்து நேரலையில் செய்தி அளித்துக் கொண்டிருந்த செய்தியாளருக்கு அப்போதுதான், அந்த குறிப்பிட்ட செய்தியாளரும் உயிரிழந்த தகவல் கிடைத்தது.
அதைக் கேட்டதும் கண்ணீர் விட்ட அவர், "என்னால் இந்த செய்தியை அறிவிக்க முடியவில்லை. 30 நிமிடங்களுக்கு முன் இங்கு நின்று கொண்டிருந்த முகமது அபு ஹத்தாப்பின் மரண செய்தியை அறிவிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 30 நிமிடங்களுக்கு முன் எங்களுடன் இருந்த முகமது அபு ஹத்தாப் வீரமரணம் அடைந்துள்ளார். நேரடியாக அவர் குறி வைக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் பலி ஆடாகியுள்ளோம்." என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)