அமெரிக்கா - இஸ்ரேல் இணைபிரியா நட்பின் ரகசியம் என்ன? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை? – வீடியோ

அமெரிக்கா - இஸ்ரேல் இணைபிரியா நட்பின் ரகசியம் என்ன? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

ஹமாஸை 'பிசாசு' என்று கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருப்பதாகவும் கூறினார்.

இஸ்ரலுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பிறகு, நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.

போர் நிறுத்தம் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் இந்த ஆதரவு ஒன்றும் புதிதல்ல.

அமெரிக்கா கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து இன்றும் கூட அதனுடன் உறுதியாக நிற்கிறது. இதன் பின்னணி என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)