You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு மக்களின் எதிர்வினை என்ன?
இரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு மக்கள் மத்தியில் கலவையான எதிர்வினை நிலவுகிறது.
ஒருதரப்பு துக்கம் அனுசரித்து வருகிறது. மற்றொரு தரப்பு கொண்டாடி வருகிறது. ரைசியின் மரணத்திற்குப் பிறகு இரான் சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் இதனை பிரதிபலிக்கின்றன.
இப்ராஹிம் ரைசியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி பதிவுகள் குவிந்து வருகின்றன. நாட்டிற்கு அவர் செய்த சேவைகளை நினைவுகூர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தள பயனர் ஒருவர், "நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் : "நீங்கள் ஒரு சிறந்த ஆளுமை. நாட்டு மக்களின் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். சில பிரபல இரானிய கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)