கனடா - இந்தியா பதற்றம்: சீக்கியர் கொலை பற்றி ஜஸ்டின் ட்ரூடோ பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, கனடாவில் இறந்த சீக்கியர் மரணத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் - ட்ரூடோ குற்றச்சாட்டு
கனடா - இந்தியா பதற்றம்: சீக்கியர் கொலை பற்றி ஜஸ்டின் ட்ரூடோ பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் 'மிகவும் கவலைக்குரியவை' என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: