‘பெண்களைக் கூட அடித்தார்கள்’ - கொல்கத்தாவில் நள்ளிரவில் வெடித்த வன்முறை

‘பெண்களைக் கூட அடித்தார்கள்’ - கொல்கத்தாவில் நள்ளிரவில் வெடித்த வன்முறை
பிரசுரிக்கப்பட்டது

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர்கள் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அங்கே உள்ளே புகுந்த கலவரக்காரர்கள் வன்முறையில் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அடையாளம் தெரியாத கும்பல் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து போராட்ட மையத்தை அடித்து நொறுக்கியது.

வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இடமும் இந்தத் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் கூறியுள்ளனர். ஆனால், இதை மறுக்கும் கொல்கத்தா காவல்துறை, குற்றம் நடந்த செமினார் அறை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது. போலி செய்திகளை பரப்புவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)