கத்தரிக்கோல்களை சேகரிக்கும் இளம்பெண் - விநோத ஆர்வத்தின் பின்னணி என்ன?
கத்தரிக்கோல்களை சேகரிக்கும் இளம்பெண் - விநோத ஆர்வத்தின் பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தனது 11 வயதில் இருந்து கத்தரிக்கோல்களை சேகரித்து வருகிறார் சிட்னி.
"பள்ளியில் இருந்து நான் வீட்டுக்கு வந்தவுடன் மேல் சட்டையை நீக்கினால், அதில் ஏராளமான கத்தரிக்கோல்கள் இருக்கும்" என்கிறார் அவர்.
இப்போது அவரிடம் 400 கத்தரிக்கோல்கள் உள்ளன. "கத்தரிக்கோல்கள் தரும் உணர்வுதான் அவற்றை நோக்கி என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவை ஏற்படுத்தும் சத்தம்கூட எனக்குப் பிடிக்கும்" என கத்தரிக்கோல்கள் மீதான விருப்பத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
கத்தரிக்கோல்களைத் தானே தயாரிக்கும் ஆர்வத்தில் வெல்டிங் பயிற்சியும் பெற்று வருகிறார் அவர்.
அவரைப் பற்றி விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



