ஆமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் மனிதப் பிழையா?

ஆமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் மனிதப் பிழையா?
பிரசுரிக்கப்பட்டது

விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பிபிசி சரிபார்த்த ஒரு காணொளியில் விமானம் கீழே இறங்குவதையும், அது தரையில் மோதும்போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது.

"இதைப் பார்க்கும்போது, இறங்கமைப்பு (Undercarriage) இன்னும் கீழே உள்ளது. ஆனால் மடிப்புகள் பின்வாங்கிய நிலையில் உள்ளன என்பது தெரிகிறது" என்று விமான ஆய்வாளர் ஜெஃப்ரி தாமஸ் கூறுகிறார்.

இதன் பொருள் மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையில் இருந்துள்ளன, விமானம் புறப்பட்ட உடனேயே இவ்வாறு இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று அவர் கூறுகிறார்.

"இறங்கமைப்பு பொதுவாக 10-15 விநாடிகளுக்குள் பின்வாங்கப்படும். பின்னர் மடிப்புகள் 10-15 நிமிடங்களுக்குள் பின்வாங்கப்படும்," என்று விளக்குகிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு