'வயநாடு துயரம்' என வைரலான போட்டோ, பதறிப்போன இளைஞர் - உண்மையில் நடந்தது என்ன? - காணொளி

'வயநாடு துயரம்' என வைரலான போட்டோ, பதறிப்போன இளைஞர் - உண்மையில் நடந்தது என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

'வயநாடு நிலச்சரிவின் துயரம்' என குறிப்பிட்டு ஒரு சகோதரன் தன் சகோதரிகளுடன் இருக்கும் படம் இடிந்த வீட்டின் சகதியில் வீழ்ந்து கிடப்பது போன்ற புகைப்படம் வைரலானது. உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது?

வயநாட்டின், சூரல்மலை, முண்டகை பகுதிகளில் செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட மனித துயரத்தைக் கூறும்விதமாக பல புகைப்படங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சூரல்மலையில் ஒரு சிதைந்த வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் பதைபதைக்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் சிதைந்த வீட்டின் சகதியின் நடுவே ஃப்ரேம் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அதில் ஒரு சகோதரன் தன் இரு சகோதரிகளை கட்டியணைப்பது போன்ற காட்சி இருந்தது.

ஆனால் உண்மை என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)