You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் உருக்குலைந்து போன காஸா வீதிகள்
தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கான் யூனிஸின் மத்தியப் பகுதிக்குள் டாங்கிகள் நுழைந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. காஸாவில் பாதுகாப்பான இடம் என சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை என பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் முழு பலத்துடன் இஸ்ரேலிய படைகள் போரிட்டு வருவதாகவும் ஹமாஸை அழிப்பது, பணையக் கைதிகளை மீட்பது உள்ளிட்ட இஸ்ரேலின் நோக்களை நிறைவேற்ற இஸ்ரேலிய படைகள் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்..
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீடோ அதிகாரத்தை பயன்படுத்தியதற்காகவும், ராணுவ உதவிகளை செய்ததற்காகவும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெதன்யாகு தெரிவித்தார்.
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள மக்கள் ரஃபாவை நோக்கிச் செல்லும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது
மத்திய காஸாவில் உள்ள டெய்ர் அல் பலாஹ்வில் தற்காலிக முகாம்கள் அமைத்து தங்கியிருக்கும் மக்கள், தங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்து தீர்ந்துவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)