குஜராத்: குழந்தைகளை தினமும் கூண்டில் அடைத்து வைக்கும் தந்தை - என்ன காரணம்?
குஜராத்: குழந்தைகளை தினமும் கூண்டில் அடைத்து வைக்கும் தந்தை - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் அம்ரேலி பகுதியைச் சேர்ந்த விவசாயி தனது குழந்தைகளை சிறுத்தை மற்றும் சிங்கத்தின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
தினமும், அவரது குழந்தைகள் இந்த கூண்டில் தூங்குகிறார்கள். சமீபத்தில், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை மற்றும் சிங்கத்தின் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தாயில்லாத ஆறு குழந்தைகளின் தந்தையான இவர் வயலில் வேலை செய்கிறார். அந்த நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இருப்பதில்லை. அதனால் அவர் தனது குழந்தைகளைக் கூண்டில் இருக்க வைக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



