குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 திட்டத்தில் யாரெல்லாம் பயனடைய முடியும்?
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதில் யாரெல்லாம் பயனடைய முடியும்? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இன்றி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்திய முதல்வர், ஆவணங்களுக்காக காத்திருக்காமல், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

























