பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவை சங்கடப்படுத்துமா?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த மாதம் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு பிரதமர் மோதி மேற்கொண்ட முதல் ரஷ்ய பயணமாக இது அமைந்தது.
மாஸ்கோ சென்றடைந்தவுடன் பிரதமர் மோதியும் ரஷ்ய அதிபர் புதினும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டது மேற்கத்திய ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதின் - மோதி இடையிலான இந்த நெருக்கம் பிடிக்கவில்லை.
இது நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி பிரதமர் மோதி யுக்ரேனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேன் செல்வது இதுவே முதல் முறை.
பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவை சங்கடப்படுத்தக் கூடும் என்று பலர் நம்புகிறார்கள். அதே சமயம் ரஷ்ய அதிபர் புதினின் சீன பயணத்தின் போது இந்தியா இதேபோன்ற சங்கடத்தை உணர்ந்திருக்கும் என்றும் கூறலாம்.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



