காஸாவில் உதவிகளை வான்வழியாக போடுவது உதவுமா?
காஸா மக்களுக்கு வான்வழியாக உதவிகளை போடுவது உதவுமா? காஸாவில் உதவிப்பொருட்களை வானில் இருந்து வீசிய ஜோர்டான் விமானத்தில் பயணித்த பிபிசியின் சர்வதேச செய்திப்பிரிவின் ஆசிரியர் ஜெரிமி போவன் கூறிவது என்ன?
''இங்கே இரண்டு விமானங்கள் உள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் 8 டன் நிவாரண பொருட்கள் இருக்கிறது என நினைக்கிறேன்.ஆனால் காஸாவுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியோடு உள்ளனர்.எனவே இது நிலைமையை பெரிதாக மாற்றாது. இது வெறுமனே அடையாளத்துக்காக தான் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் பார்க்க இது நன்றாக இருக்கும். ஏதோ நல்லது நடக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தும்.'' என்கிறார் ஜெரிமி போவன்
''ஆனால் உண்மையில், சாலை வழியாக உதவி பொருட்கள் தொடர்ந்து வந்தால் மட்டுமே காஸாவில் நிலைமை மாறும். ஐநா மற்றும் மற்ற அமைப்புகளும் இதை கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு இஸ்ரேலிடம் இருந்து தற்போதைக்கு எந்த வாக்குறுதியும் இல்லை. தற்போது வழங்கப்படும் உதவியை இஸ்ரேல் ஏன் அனுதித்தார்கள்?
காரணம், அழுத்தம்தான். காஸாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து நட்பு நாடுகளிடம் இருந்து வரும் அழுத்தம்.
தங்களது விதிகள் காஸாவுக்குள் உதவிப்பொருட்கள் போவதை தடுக்கவில்லை என இஸ்ரேல் வாதிட்டாலும் பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிலர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.'' என்கிறார் அவர்



