அமெரிக்கா: கருப்பின இளைஞரை தாக்கிய போலீஸ்; காணொளியால் சர்ச்சை

அமெரிக்கா: கருப்பின இளைஞரை தாக்கிய போலீஸ்; காணொளியால் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் போலீசார் ஒரு கறுப்பின இளைஞரை அவரது கார் ஜன்னலை உடைத்து அவரை வெளியே இழுத்து, தாக்கும் வீடியோ வெளியாகி தேசிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் உரிமைகள் வழக்கறிஞர்கள், போலீசார் தங்கள் கைது அறிக்கையை மாற்றி எழுதியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜாக்சன்வில்லில் பிப்ரவரியில் இந்த சம்பவம் நடந்தது.

அவரது கார் ஹெட்லைட்கள் அணைக்கப்பட்டிருந்ததாக கூறி அவரை போலீஸார் நிறுத்தியுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் நடந்தது பகல் நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்சன்வில் ஷெரிஃப் டி.கே. வாட்டர்ஸ் கூறுகையில் மெக்நீலை ஜன்னலை உடைப்போம் என்றும் வெளியே இழுப்போம் என்றும் அதிகாரிகள் பலமுறை எச்சரித்ததாக கூறியுள்ளார்.

அரசுத் தரப்பின் வழக்கறிஞர் தரப்பில், இந்த சம்பவத்தில் அதிகாரிகள் குற்றவியல் சட்டத்தை மீறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி வைரலான நிலையில் இளைஞரை தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு