அமெரிக்கா: நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி
அமெரிக்கா: நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் பெண் நீதிபதியை தாக்கும் காட்சி இது. லாஸ் வேகஸில் உள்ள நெவடா நீதிமன்றத்தில் டியோப்ரா ரெட்டன் என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி மேரி கே ஹொல்தஸ் தண்டனை விவரங்களை அறிவிக்கத் தொடங்கினார். அப்போது, டியோப்ரோ திடீரென ஓடிவந்து நீதிபதி மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்.
அருகில் இருந்த காவலர், நீதிமன்ற ஊழியர் ஆகியோர் டியோப்ரோவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் டியோப்ரோ தாக்குதல் நடத்தினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



