திமுக கூட்டணியில் 2 தொகுதிகளுக்கு சம்மதித்தது ஏன்? - தொல். திருமாவளவன் விளக்கம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக முனைப்பு காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு உறுதிசெய்யப்பட்டநிலையில், தற்போது விசிகவிற்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலில் விசிக திமுகவிடம் 3 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதி கேட்ட நிலையில், பின்னர் குறைந்தது 3 தொகுதிகளாவது பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், கடந்த முறை ஒதுக்கப்பட்டதை போல இந்த முறையும் விசிகவிற்கு 2 தனித்தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
அதன்படி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட உள்ளது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பின், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



