துபாயில் கடலுக்கு அடியில் என்ன செய்கிறது அந்நாட்டு அரசு? - காணொளி

காணொளிக் குறிப்பு, துபாயில் கடலுக்கு அடியில் என்ன செய்கிறது அந்நாட்டு அரசு?
துபாயில் கடலுக்கு அடியில் என்ன செய்கிறது அந்நாட்டு அரசு? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கடலின் உயிர்நாடியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது இந்த தன்னார்வலர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழு. இது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பவளப்பாறைகளை விரிவுப்படும் முயற்சியின் ஒரு பகுதி.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சுற்றி இருக்கும் 600 சதுர மீட்டர் கடல்பரப்பில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் இன்று வரை நடப்பட்டுள்ளன. நீருக்கு அடியில் பவளப்பாறைகளை வளர்ப்பதற்கு நிறைய கவனமும் நிபுணத்துவமும் தேவைப்படும்.

பவளப்பாறைகளை மீட்பதற்காக உலக நாடுகள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. ஆயினும், பவளப்பாறைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்களைச் சரி செய்வது மட்டுமே உண்மையான தீர்வாக இருக்கும் என சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அதன் பவளப்பாறைகளை மீட்டெடுக்கவும், இந்த முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு நாட்டின் முதல் கடல் காப்பகம் நிறுவப்பட்டது. இங்கு பவளப்பாறைகளை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு, ஐ.நா சார்பாக நிலையான வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தசாப்தம் தொடங்கப்பட்டது.

தயாரிப்பு - ரோனக் கோடேச்சா, பிபிசி நியூஸ், துபாய்

துபாய், சுற்றுச்சூழல், பவளப்பாறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: