You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல்காந்திக்கு எம்.பி. பதவி திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளதா? சட்டம் என்ன சொல்கிறது?
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுநாளே அவரது எம்.பி. பதவியைப் பறித்து மக்களவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 102(1)-ன் படி இந்த தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நீரவ் மோதி, லலித் மோதி உள்ளிட்ட சிலர் குறித்துப் பேசும் போது மோதி என்ற பின்னொட்டை குறிப்பிட்டு அவர் முன்வைத்த விமர்சனம் தொடர்பாக 2019-ம் ஆண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிரொலியாக பதவியிழந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் உண்டு. ஆனால், அவதூறு வழக்கிற்காக ஒருவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்