துபாயின் வரலாறு காணாத மழை பொழிவுக்கு என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, துபாயில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு அங்கு செயல்படுத்தப்படும் வரும் மேக விதைப்பு காரணமா?
துபாயின் வரலாறு காணாத மழை பொழிவுக்கு என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

துபாயில் வரலாறு காணாத மழை பெய்யுள்ளது. பொதுவாக வறண்ட வானிலைக்கு அறியப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான துபாயில் பெருமழை பெய்வதற்கான காரணம் என்ன?

துபாயில் ஒரே நாளில் 259.5 மி.மீ மழை பெய்தது. இது ஓராண்டில் பெய்யும் மழையின் அளவாகும். 1949ம் ஆண்டு வானிலை தரவுகள் சேகரிப்பதற்கு தொடங்கிய காலத்திலிருந்து இது போன்ற மழையை துபாயில் பெய்ததில்லை என்று அரசு ஊடகம் கூறுகிறது.

துண்டிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம் சூடான ஈரமான காற்றை உள் இழுக்கும். இதனால் மற்ற வானிலை அமைப்புகள் உள்ளே வரமுடியாது. இதுவே துபாயின் வெள்ளத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

காலநிலை மாற்றமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

துபாயில் செய்யப்படும் மேக விதைப்பு முறை இந்த வெள்ளத்துக்கு காரணமாக இருக்கலாம என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வறண்ட பகுதிகளில் செயற்கை மழை பொழிவுக்காக, சில்வர் ஐயோடைட் விமானத்தின் மூலம் மேகத்தில் தூவப்படும். இது நீராவியை நீராக மாற்றும். தற்போது ஏற்பட்டிருக்கும் வெள்ள முழுக்க முழுக்க இயற்கையானது என்று அரசு கூறுகிறது. இந்த ஆண்டு இது வரை மேக விதைப்பு செய்யவில்லை என்றும் அரசு குறிப்பிடுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)