இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் பலியான 9 பாலத்தீனர்கள்
பாலத்தீனத்தின் ஜெனின் நகரில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாமைச் சுற்றிவளைத்து இஸ்ரேலிய படைகள் சுட்டதில் 9 பாலத்தீனர்கள் உயரிழந்தார்கள். 61 வயதுப் பெண் உள்பட 2 பொதுமக்களும் இதில் அடங்குவர். இஸ்லாமிய ஜிகாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
இரண்டு தசாப்தங்களில் இல்லாத வகையில் இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஜெனின் நகரில் நடந்த இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலை, படுகொலை எனக் கூறியிருக்கிறது பாலத்தீன அதிபர் அலுவலகம். 2002-ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்களுடன் இது ஒப்பிடப்படுகிறது. அப்போது ஜெனின் அகதி முகாம் முற்றிலுமாகத் தரைமட்டமாக்கப்பட்டது.
அச்சத்தை அதிகரிக்கும் வகையில் காஸாவில் இருந்து இஸ்ரேலை நோக்கியும் இஸ்ரேலிய பகுதியில் இருந்து காஸாவை நோக்கியும் பரஸ்பரம் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஸாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஹமாஸ் அமைப்பு மீதே இஸ்ரேல் வழக்கமாகக் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த ஆண்டில் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 30 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மேற்குக்கரையில் நடந்த தாக்குதல்களில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



