சீனாவின் மாம்பழ மார்க்கெட்டை குறிவைக்கும் பாகிஸ்தான்

காணொளிக் குறிப்பு, சீனாவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
சீனாவின் மாம்பழ மார்க்கெட்டை குறிவைக்கும் பாகிஸ்தான்
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து சீனாவிற்கு ஏற்மதி செய்யப்படும் மாம்பழங்கள். பாகிஸ்தானில் ஜுலை முதல் செப்டம்பர் வரை மாம்பழங்களுக்கான காலம். ஆலைகளில் சுற்றிகரிக்கப்பட்ட மாம்பழங்கள், ஏற்றுமதிக்காக பேக் செய்யப்படும்.

சீனா மாம்பழங்களுக்கான மிகப்பெரிய சந்தை. ஆனால், அந்நாடு தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தான் மாம்பழங்கள்
படக்குறிப்பு, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள்

சீனாவின் மாம்பழச்சந்தையை படிப்படியாக கைப்பற்ற பாகிஸ்தான் முயல்கிறது. பாகிஸ்தானின் அதிக இனிப்புச்சுவை உடைய மாம்பழங்கள் நார்ச்சத்து இல்லாதவை.

இந்த வகை மாம்பழங்கள் சீனவின் தேவைக்கு மிகவும் பொருத்தமானவை. ஆனால், மாம்பழங்களை வளர்க்க சீனா கடும் நிபந்தனைகளை முன்வைக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: