ஐவிஎஃப் பிழை - கலப்பு இன குடும்பத்தில் பிறந்த வெள்ளை இனப் பெண்
“ஏதோ சரியாக இல்லை என்பது தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அதைப் பற்றி நான் கேள்வி கேட்டதில்லை. எனக்கு உயிரியலில் அவ்வளவு ஆர்வம் இல்லை, என் அம்மா ஒரு வெள்ளையர் என்பதால் நானும் அப்படி இருக்கிறேன் என்று நினைத்தேன்.” என்று கூறுகிறார் ஹடேயா ஒகிஃபோர்.
தான் ஐவிஎஃப் (IVF) மூலம் பிறந்த குழந்தை என்பதை 12 வயதில் ஹடேயா அறிந்துகொண்டார். அவருடைய பெற்றோர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து விந்தணு தானம் பெற விரும்பினர், ஆனால் மருத்துவமனையில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.
மருத்துவமனை தவறான விந்தணுவைப் பயன்படுத்தியதால், ஹடேயா கலப்பு இனத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் வெள்ளை நிறத்தில் பிறந்தார் என்பதை அவருடைய பெற்றோர் உணர்ந்தனர்.
அவர் 2019ஆம் ஆண்டு டி.என்.ஏ பரிசோதனை செய்து கொண்டார், ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு குறுஞ்செய்தி மூலம் தனக்கு குறைந்தது 15 ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
ஆனால் இந்த உண்மை, தனது அப்பாவுடனான உறவைப் பாதிக்கவில்லை என்று ஹடேயா கூறுகிறார்.
“எப்போதும் எனக்கு அவர் தான் தந்தை. என்னை வளர்த்தவர், நான் பிறந்ததிலிருந்து வாழ்க்கை முழுவதும் துணையாக நின்றவர், இப்போதும் எனக்காக இருப்பவர்.” என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



