காணொளி: உடலில் ஆலிவ் எண்ணெய் பூசிக் கொண்டு ஆண்கள் மல்யுத்தம்
காணொளி: உடலில் ஆலிவ் எண்ணெய் பூசிக் கொண்டு ஆண்கள் மல்யுத்தம்
பிரசுரிக்கப்பட்டது
மல்யுத்த வீரர்கள் தம் உடல் முழுக்க ஆலிவ் எண்ணெயை பூசிக் கொள்கின்றனர். எதிராளியின் தோள்பட்டைகளை தரையோடு அழுத்திவிட்டால் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
இந்த விளையாட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பால்கன் பகுதியில் நடக்கும் பல போட்டிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் பேசிய செர்னா நகர மேயர் இஸ்மாயில் எபஜெரோவ், "ஒட்டோமான் ஆட்சியின்போது, இதேபோன்ற மல்யுத்தப் போட்டி நடத்தப்பட்டது.
மல்யுத்த வீரர்கள் தம் உடலில் ஆலிவ் எண்ணெயை பூசி, எருமைத் தோளாலான டிரௌசர்களை கால்களில் இறுக்கமாக அணிந்துகொண்டு பங்கெடுப்பார்கள் என்பதே இந்தப் போட்டியின் தனிச்சிறப்பு" என்றார்.
அதோடு, இதில் வெல்வதற்கு பலத்துடன் சில நுணுக்கங்களும் தேவை என்று குறிப்பிட்டார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



