காணொளி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றின் அருகே செல்ஃபி எடுத்த முன்னாள் எம்.பி

காணொளி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றின் அருகே செல்ஃபி எடுத்த முன்னாள் எம்.பி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சபர்மதி ஆற்றின் அருகே ஆபத்துகளை பொருட்படுத்தாமல் ஒருவர் செல்பி எடுக்கும் காட்சி இது.

அவர் வேறு யாரும் இல்லை... குஜராத் சபர்காந்தா தொகுதியின் முன்னாள் எம்.பி. தீப்சிங் ராதோட்.

கனமழையால் சபர்மதி ஆற்றின் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், முன்னாள் எம்.பி. ஆற்றின் அருகே செல்பி எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோ தொடர்பாக பிபிசி குஜராத்தி தீப்சிங் ராதோட்டை தொடர்புகொண்டபோது, "நான் அங்கு நிலைமையை பார்வையிடச் சென்றேன். அங்கு போலீசாரும் இருந்தனர். அவர்கள் நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தனர்." என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு