You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண், நாக்கு உட்பட உடல் முழுக்க டாட்டூ - அமெரிக்க பெண்ணின் நூதன கின்னஸ் சாதனை
இவர், உலகிலேயே மிக அதிகமாக டாட்டூ செய்திருக்கும் பெண்.
முன்னாள் அமெரிக்க ராணுவ வீராங்கனையான எஸ்பெரான்ஸ் ஃபுயெர்சினா, தனது உடலின் 99.98% இடத்தை டாட்டூக்கள் மறைத்துள்ளதாகக் கூறுகிறார்.
“இவற்றில் மிக ஆபத்தானது என் கண்விழிகளில் செய்யப்பட்டிருக்கும் டாட்டூ, அது மிகவும் தீவிரமான ஒரு மாற்றம்,” என்கிறார் அவர்.
தனது நாக்கிலும், தாடையிலும் கூட அவர் மையால் கறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
“இந்த டாட்டூக்கள் என் நினைவுகளின் தொகுப்பு. இவற்றை நான் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்,” என்கிறார் அவர்.
தான் ஒரு நாடோடியாகவே வாழ்ந்திருப்பதாகவும், தனக்குத் துணை யாரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
‘உலகின் அதிகமாக டாட்டூ செய்துகொண்ட பெண்’ என்ற சாதனைக்காக ஃபுயெர்சினா கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவார்.
“நான் டாட்டூ செய்வது இன்னும் முடியவில்லை,” என்கிறார் ஃபுயெர்சினா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)