You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு காஷ்மீர்: தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் - என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
பாதுகாப்புப் படைகள் சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அப்பாவி குடிமக்களைக் கொன்று பொதுமக்களுக்கு இடையே வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைப் பரப்புவது மனிதநேயத்திற்கு எதிரான குற்றம். மொத்த நாடும் இதற்கு எதிராக நிற்கிறது என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)