You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய விமானங்களுக்கு அதிகரிக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல்களால் என்ன பிரச்னை?
சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் சுமார் 24 விமானங்களுக்கு Bomb Threat Call வந்துள்ளன. சரி, இதனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது? மூன்று முக்கிய பிரச்னைகளை பார்க்கலாம்.
1. விமானம் வானில் பறந்துகொண்டிருந்தால், அது அருகிலுள்ள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட வேண்டும். கடந்த வாரம் மும்பையில் இருந்து சிகாகோ சென்ற விமானம், மிரட்டல்களால் கனடாவில் உள்ள தொலைதூரக் குளிர் நகரமான இகலூயிட்டில் தரை இறங்கியது.
2. விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள், விமானத்தில் இருக்கும் அனைத்து சாமான்களும் முழுமையான தேடலுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறை முடிய பல மணிநேரம் ஆகலாம். பணி நேர வரம்புகள் காரணமாக இதைச் செய்ய மாற்றுக் குழு தேவைப்பட்டால், இன்னும் நேரம் அதிகமாகும்.
3. விமானங்கள் ரத்து, அல்லது அவசரமாக தரையிறக்குதல் உள்ளிட்டவை பயணிகளுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. இது விமான நிறுவனங்களுக்கு பெரும் செலவையும் ஏற்படுத்தும். திசை திருப்பப்படும், அல்லது தாமதமாகும் ஒவ்வொரு விமானமும் கணிசமான செலவினங்களைச் சந்திக்கிறது. ஏனெனில், தரையிறக்கப்பட்ட விமானங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் தாமதங்கள் விமான நிறுவனமே பயணத்தை ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி விமானச் சேவை அட்டவணைகள் முழுவதும் பாதிக்கப்படுகின்றன,"
ஆனால் இவை மட்டுமல்ல, இந்த மிரட்டல்களால் முன்பதிவு செய்த விமானத்தில் செல்ல வேண்டுமா என்ற கவலையும் சிலருக்கு ஏற்படுகிறது. விமானத்தில் பயணிப்பவர்களுக்கும் அச்ச உணர்வை உண்டாக்குகிறது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)