விஜயை பார்க்க சென்று 2 வயது குழந்தையை பறிகொடுத்த குடும்பம் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, கரூரில் 2 வயது குழந்தையை பறிகொடுத்த குடும்பம் கூறுவது என்ன?
விஜயை பார்க்க சென்று 2 வயது குழந்தையை பறிகொடுத்த குடும்பம் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இவர் கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் தனது தம்பியின் இரண்டு வயது மகனை பறிகொடுத்தவர். செப்டெம்பர் 27 இரவு நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரை நிகழ்ச்சியில் இதுவரை உயிரிழந்த 41 பேர்களில் குழந்தைகள் 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரு குழந்தைதான், 2 வயதுள்ள துருவிஷ்ணு. இதில் சோகம் என்னவென்றால் உயிரிழந்த இந்த குழந்தையின் தாய் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி.

இந்த அசம்பாவிதம் நிகழ்ந்த அதே பகுதியில்தான் வடிவேல் நகர் உள்ளது. அங்குதான் இந்த குழந்தையின் பெற்றோர் வசிக்கும் வீடு உள்ளது.

விஜயை பார்க்க தனது குழந்தைகளுடன் சகோதரர் குழந்தையை தூக்கிச் சென்ற லல்லி, அன்று நடந்தது என்ன என்பதை பிபிசியிடம் விவரித்தார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு