You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காஸா படம்
காஸா திரைப்படமான 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப்படத்துக்கு பார்வையாளர்கள் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
நடிகர் மோடாஸ் மல்ஹீஸ் பாலத்தீனக் கொடியை அசைக்க கூட்டத்தினர் 'Free Palestine.' என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கௌதர் பென் ஹனியா பேசுகையில் "ஒரு குழந்தையின் கொலை மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்ல வேண்டிய நிலை வந்திருக்கிறது என்பதே மிகக் கொடூரமானது. எனக்குத் தெளிவாக தெரியும். இதெல்லாம் நடக்கவே கூடாது. இது ஒரு குற்றம். மோசமான விஷயம். இந்தப் படம் 'ஹிந்த் ரஜப்' கொல்லப்பட்ட கதையை பேசுகிறது." என்றார்.
2024ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த 6 வயதான ஹிந்த் ரஜப் மற்றும் அந்த சிறுமியின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு