ஜெயிலர் வசூல் சாதனை எவ்வளவு? சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறதா?

ஜெயிலர் வசூல் சாதனை எவ்வளவு? சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறதா?
பிரசுரிக்கப்பட்டது

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் முதல் வார வசூல் அடிப்படையில் தமிழ் சினிமாவில் வரலாறு படைத்துள்ளதாக சன் பிச்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான தர்பார், 2021ஆம் ஆண்டில் வெளியான அண்ணாத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேச, அதைத் தொடர்ந்து சர்ச்சை உருவெடுத்தது.

அந்த சர்ச்சையும் அதையொட்டிய விவாதங்களும் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் பிரதிபலித்தது. அப்போது சன் பிச்சர்ஸ் கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அவரே எனத் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: