எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பின் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, எதிர்க்கட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது மிகவும் அவசியம் என்று கூறினார் ராகுல் காந்தி.
எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பின் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக புதன்கிழமை அன்று உரையாற்றினார்.

மீண்டும் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், "அரசுக்கு முழு அரசியல் அதிகாரம் உள்ளதுதான், ஆனால் எதிர்க்கட்சிகளும் இந்திய மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. குறிப்பாக இந்த முறை எதிர்க்கட்சிகள் இந்திய மக்களின் குரலை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத்தை நடத்த எதிர்க்கட்சி உங்களுக்கு உதவும். இந்த ஒத்துழைப்பில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். எதிர்க்கட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது மிகவும் அவசியம். இந்த அவையில் எதிர்க்கட்சியின் குரல் ஒடுக்கப்படாது என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது."

"அப்படியென்றால், நாடாளுமன்றம் அமைதியாக இயங்குமா என்பது கேள்வி அல்ல, இந்திய மக்களுக்காக குரல் எழுப்ப எதிர்கட்சிகளுக்கு முழு உரிமை கொடுப்பீர்களா என்பதுதான் கேள்வி. எதிர்கட்சிகளின் குரலை நசுக்குவதன் மூலம், உங்களால் நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த முடியும்தான், ஆனால் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு’’ என்றார்.

முழு விவரம் காணொளியில்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)