போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ தேவையில்லாமல் போய்விட்டாரா?

காணொளிக் குறிப்பு, போர்ச்சுகல் அணிக்குத் தேவையில்லாமல் போன ரொனால்டோ
போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ தேவையில்லாமல் போய்விட்டாரா?
பிரசுரிக்கப்பட்டது

போர்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ்.

ரொனால்டோ இல்லாத நிலையில் போர்சுகல் அணி உலகக் கோப்பை போட்டிகளில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதால் அது அவருக்கு மேலும் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

போர்ச்சுகல் அணிக்கு ரொனால்டோ தேவையில்லையா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: