இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்

காணொளிக் குறிப்பு, இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்
இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்
பிரசுரிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபஜா என்ற மாற்றுத்திறனாளி ஒரு விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது வாழ்வாதாரத்திற்காக சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகத்துக்கு வெளியே அரசு நலத்திட்ட விண்ணப்பங்கள், கோரிக்கை மனு, கடிதங்கள் உள்ளிட்டவை பூர்த்தி செய்து வருமானம் ஈட்டி வருகிறார். 

இத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையுடன் சக்கர நாற்காலியுடன் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக பயிற்சி எடுத்து மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது பாரா தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரின் தன்னம்பிக்கை கதை என்ன என்பதை பார்ப்போம்.

தயாரிப்பு: ஆ.லட்சுமி காந்த் பாரதி

மாற்றுத்திறனாளி சுபஜா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: