You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை கண்காணிக்கிறதா சீனாவின் உளவு பலூன்
அமெரிக்காவின் முக்கியமான சில இடங்களில் கண்காணிப்பு பலூன் ஒன்று பறப்பதாகவும் அந்த பலூன் சீனாவுக்கு சொந்தமானது என்று நம்புவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமையன்று அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகருக்கு மேலே காணப்பட்ட இந்த பலூன், அதற்கு முன் அலாஸ்காவின் அலூடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி, வெள்ளை மாளிகை உத்தரவிட்டால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவதற்கு, F-22 உட்பட போர் விமானங்களை அரசாங்கம் தயார் செய்துள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையில், சீனாவின் பெய்ஜிங்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க், `நிலைமையைப் புரிந்துகொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம். உண்மைகள் தெளிவாகும் வரை, ஊகங்களை உருவாக்குவதும், பிரச்னையை அதிகப்படுத்துவதும் சிக்கலை சரியாகத் தீர்ப்பதற்கு உகந்ததல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.` என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்