அமெரிக்காவில் பற்றி எரிந்த காருக்குள் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு - எப்படி?

அமெரிக்காவில் பற்றி எரிந்த காருக்குள் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு - எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் மின்னசோட்டாவில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த காருக்குள் சிக்கிய நபர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.

சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. உடனே அந்த காரில் தீ பிடித்துக் கொண்டது. இதில் காரை ஓட்டி வந்த நபர் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.

கார் கதவு சாலை தடுப்பிற்கு இடையில் சிக்கிக்கொண்டதால் உள்ளே இருந்தவரை காப்பாற்ற கடும் முயற்சி நடந்தது. இதனால், அருகில் இருந்த கூரான பொருளைக் கொண்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ஓட்டுநர் காப்பற்றப்பட்டார்.

பின்னர் அவசர ஊர்தி மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)