You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோனாலிசா ஓவியம் மீது 'சூப்' வீசிய பெண்கள் - எதற்காக தெரியுமா?
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்( Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் பல்வேறு புராதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. லியார்னடோ டா வின்சி 16ஆம் நூற்றாண்டில் வரைந்த உலகின் சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படும் மோனாலிசா ஓவியமும் இதில் அடக்கம்.
ஜனவரி 28ஆம் தேதி இந்த அருங்காட்சியகத்துக்கு வந்த இரண்டு பெண்கள் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசினர். பின்னர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய அவர்கள், கலை முக்கியமா அல்லது உணவு பாதுகாப்பு முக்கியமா என கேள்வி எழுப்பினார்.
இந்த செயலுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான அமைப்பான ரிப்போஸ்டே அலிமெண்டேர் குழு பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த செயலை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தும் வேலை நடைபெற்றதாகவும் அதன் பின்னர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் லூவ்ரே அருங்காட்சியகம் கூறியுள்ளது. மோனாலிசா ஓவியம் மீது சூப் தெளிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்படும் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது
பாதுகாப்பு கண்ணாடிகள் காரணமாக ஓவியம் சேதமாகவில்லை என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1950களின் தொடக்கத்தில் மோனாலிசா ஓவியம் மீது ஆசிட் வீசப்பட்டது. அதன் பின்னர், ஓவியம் பாதுகாப்பு கண்ணாடிக்கு பின்னால் வைக்கப்பட்டது. ஓவியத்தை பாதுகாக்க குண்டு துளைக்காத கண்ணாடி நிறுவப்பட்டுள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டு அருங்காட்சியகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)