உஷா வான்ஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது உறவினர்கள் கூறுவது என்ன?
அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் இந்தியாவின் தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறார் உஷா வான்ஸ். உஷா, அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜேம்ஸ் டேவிட் (ஜே.டி.) வான்ஸின் மனைவி என்பதே இதற்குக் காரணம்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட உஷா தெலுங்கு பேசும் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் உஷா சிலுகுரி. டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸை அறிவித்த பின்பு உஷாவின் பெயர் இந்தியாவில், குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் வைரலாக பரவி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் வசிக்கும் 96 வயதான பேராசிரியர் சிலுகுரி சாந்தம்மா, உஷாவின் நெருங்கிய உறவினர். அவரது பூர்வீகம், மேற்கு கோதாவரியில் இருக்கும் கொடேரு (Goderu) என்ற கிராமம் என்றும் சாந்தம்மா கூறினார்.
உஷா வான்ஸின் பெற்றோர்கள் 1970களிலேயே அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர். உஷாவும் அவரது சகோதரியும் அங்குதான் பிறந்து வளர்ந்தார்கள். ஆகவே அவர்களை அடிக்கடி பார்க்க இயலவில்லை என்றும் குறிப்பிடுகிறார் சாந்தம்மா.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



