இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க: நீதிமன்ற ஆவணங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் என்னென்ன?

இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க: நீதிமன்ற ஆவணங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் என்னென்ன?
பிரசுரிக்கப்பட்டது

டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: