வெறும் 26 கிலோ எடையுள்ள பிரக்யான் ரோவர் என்ன சாதிக்கும்?

வெறும் 26 கிலோ எடையுள்ள பிரக்யான் ரோவர் என்ன சாதிக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் வெளியேறி பணிகளைத் தொடங்கி உள்ளது. நிலவில் என்ன செய்யப் போகிறது?

அதுகுறித்த தகவல்களை இஸ்ரோ அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.

இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.

அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: