You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை தொகுதி மக்களை சாதி, மத ரீதியாக மக்களை அணி திரட்டி வெற்றி பெறுவது சாத்தியமா? – காணொளி
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான கோயம்புத்தூர், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
நீண்ட காலமாகவே கோயம்புத்தூரும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களும் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆகவே, இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு, பல்வேறு விஷயங்களை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. கோவை தெற்கு தொகுதி மட்டும் பா.ஜ.க. வசம் உள்ளது. கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)