You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நூற்றுக்கணக்கான விலங்குகளுக்கு மத்தியில் தைரியமாக படகோட்டும் பெண்
இவர், போட்ஸ்வானாவின் மாகரோ நதியில் படகோட்டும் வேலை செய்து வருகிறார். உள்ளூர் மக்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய இந்த வகை படகுகள், இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
ஆப்பிரிக்காவில் முதன்மையான காட்டுயிர் சஃபாரி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இடமாக போட்ஸ்வானா உள்ளது. இங்கு ஓகவாங்கோ டெல்டா 15,000 சதுர கி.மீ. வரை நீண்டுள்ளது.
இங்கு நூற்றுக்கணக்கான விலங்குகளும், மரங்களும் உள்ளன. இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்த படகோட்டிகள் காட்டுயிர் சுற்றுலா கைடுகளாகவும் இருக்கின்றனர்.
போட்ஸ்வானாவுக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கோவிட் தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை குறைந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)