யுக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்திய டிரம்ப் - என்ன நடக்கிறது?
யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை மூலம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உறுதி செய்துள்ளார்.
"தற்போதுள்ள சூழலில் யுக்ரேனில் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ள ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டும் தான்" என அவர் கூறியுள்ளார்.
"நாங்கள் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். அமைதி சாத்தியமானதா என ஆராய விரும்புகிறோம்" எனவும் ரூபியோ கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்கோ ரூபியோ மூலம் வெளியாகியுள்ளது.
யுக்ரேனுக்கான ராணுவ உதவியை அமெரிக்க அதிபர் நிறுத்தியுள்ளார் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
புளூம்பெர்க் செய்தியின் படி, "யுக்ரேன் தலைவர்கள் அமைதிக்கு உறுதி பூணும் வரை அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தின் செய்திகளின்படி, யுக்ரேனுக்கு சென்றடையாத அனைத்து ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும். யுக்ரேனுக்கு சென்று கொண்டிருக்கும் ஆயுதங்களை அப்படியே நிறுத்தி வைப்பதுடன், போலந்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு சப்ளை செய்வதும் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஸெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வர வெகு காலம் ஆகும் என்று தெரிவித்ததை டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
புளூம்பெர்க் செய்தியின் படி, "யுக்ரேன் தலைவர்கள் அமைதிக்கு உறுதி பூணும் வரை அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தின் செய்திகளின்படி, யுக்ரேனுக்கு சென்றடையாத அனைத்து ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும். யுக்ரேனுக்கு சென்று கொண்டிருக்கும் ஆயுதங்களை அப்படியே நிறுத்தி வைப்பதுடன், போலந்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு சப்ளை செய்வதும் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)