You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் ஒரே பாட்டில் புகழின் உச்சிக்குச் சென்ற ஆடு மேய்க்கும் இளைஞர்
பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதிப் பள்ளத்தாக்கில் ஆடு மேய்ப்பவர் நிஸாமுதீன்.
ஆடுமேய்க்கும் போது, தனது தாய்மொழியான தோர்வாலி மொழியின் பாரம்பரியப் பாடலான ‘ஸோ’ பாடலைப் பாடுவது அவரது வழக்கம்.
சமீபத்தில் அவர் அப்படிப் பாடிக்கொண்டிருக்கையில், அப்பகுதிக்கு வந்த சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவர் பாடுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினர்.
அடுத்து நடந்தது, ஒரு சினிமாக் கதையைப் போன்றது.
அந்த வீடியோ மிகப் பிரபலமாகி, நிஸாமுதீனுக்கு, பிரபலமான இசை நிகழ்ச்சியான ‘கோக் ஸ்டூடியோ’வில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் அவர் தோர்வாலி மொழியின் ‘ஸோ’ பாடலைப் பாடினார்.
அப்போதிருந்து, தோர்வாலி மொழி பற்றியும், ஸ்வாத் பகுதியில் வாழும் மக்களைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வமிகுதியால், தொலைதூரத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
இதன்மூலம் அப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் மீதும் கவனம் குவிந்து, அவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)