You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பிகாரில் ஒருவருக்கு கண்ணில் பல் வளர்ந்தது எப்படி?
மனிதனின் கண்ணில் பல் வளருமா? கேட்கவே விந்தையாக உள்ளதா? பீகாரில் இதுபோன்ற இரு நிகழ்வுதான் நடந்துள்ளது. 42 வயதான நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் இத்தகைய பிரச்னையுடன் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு வந்தார். அக்டோபரில் மேல் பல்லில் இருந்து ரத்தம் வந்தபோது இந்தப் பிரச்னை அவருக்கு தொடங்கியது.
"முதலில் உள்ளூர் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றோம், எல்லாம் சரியாக இருப்பது போல தோன்றியது. ஆனால், மார்ச் மாதத்தில் முகத்தில் கட்டி போன்ற ஒன்றை உணர ஆரம்பித்தேன். அதனால், பார்வை மங்கலானது. தலையின் வலதுபக்கத்தில் அடிக்கடி வலித்தது. மயக்கம், சோர்வு என எப்போதும் தூங்க வேண்டும் என்றே தோன்றியது. மருத்துவரை மீண்டும் அணுகினோம். சிகிச்சைக்காக பாட்னா செல்லுமாறு அறிவுறுத்தினார். ஜூன் மாதத்தில் நாங்கள் IGIMS-ல் உள்ள பல் மருத்துவப் பிரிவுக்கு சென்றோம்." என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இவருக்கு மேக்ஸில்லோஃபேசியல் (Maxillofacial) எனப்படும் வாய் மற்றும் முக எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரியங்கர் சிங் மற்றும் கதிரியக்க நிபுணர் நிம்மி சிங் ஆகியோர் சிகிச்சையளித்தனர். இவரின் கண்ணில் பல் எப்படி வளர்ந்தது என அவர்கள் விளக்கினர்.
"நம் உடலில் சில கூறுகள், அவை வளர வேண்டிய இடத்தை தவிர வேறு இடங்களில் சில சமயம் வளரக்கூடும். ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது அல்லது முகம் உருவாகும் காலத்தில், பற்களை உருவாக்குவதற்குப் பொறுப்பான செல்கள் சில நேரங்களில் இடம்பெயர்ந்து தவறான இடத்தில் உயிர்வாழக்கூடும். இங்கே அதுதான் நடந்தது. பல் உருவாக்கும் செல்கள் தாடைக்கு பதிலாக floor of the orbit-ல் வளர்ந்தன, மேலும் காலப்போக்கில், அவை ஒரு பல்லை உருவாக்கின." என மருத்துவர் பிரியங்கர் சிங் தெரிவிக்கிறார்.
"இது ஒரு வளர்ச்சி குறைபாடு. கரு வளரும்போது, பற்களின் அமைப்பும் உடலின் பிற பாகங்களுடன் சேர்ந்து வளரத் தொடங்குகிறது. சில நேரங்களில், பல் தவறான இடத்தில் வளரலாம். முதலில் நாங்கள் Orthopantomogram சோதனை செய்தோம். பின்னர் CBCT ஸ்கேன் செய்தோம். இது 3D படத்தை வழங்குகிறது. குறிப்பாக CBCT தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கான maxillofacial areas பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மனித மண்டை ஓட்டில், கண் அமைந்துள்ள எலும்பு செல் - ஆர்பிட் என்றும், ஆர்பிட்டின் கீழ்ப்பகுதி 'floor of the orbit' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நபரின் floor of the orbit-ல் பல்லின் வேர்கள் இருந்தது மேற்கூறிய சோதனையின் மூலம் தெரியவந்தது." என்கிறார் மருத்துவர் நிம்மி சிங்
பல்லின் வேர்கள் floor of the orbit வழியாக ஊடுருவியது, இது maxillary sinus-ல் பல் உருவாக வழிவகுத்தது. எனவே, பல்லின் வேர்கள் floor of the orbit-ல் இருந்தபோது, மேல் பகுதி sinus எனப்படும் முக எலும்பின் மேல் பகுதிக்குள் நுழைந்தது."
பல் இயல்பான இடத்தில் உருவாகாததால், அதை அந்நியப் பொருளாக உடல் கருதியது. தன்னைப் பாதுகாக்க, நோயெதிர்ப்பு அமைப்பு பல்லைச் சுற்றி கட்டியை உருவாக்கியது. இந்த கட்டி இறுதியில் maxillary sinus முழுவதும் பரவியது. இதனால் முகம் வீங்கியது. அதுமட்டுமின்றி மேல் தாடையில் எலும்பு இழப்பு ஏற்படவும் காரணமானது."
கண்ணின் floor of the orbit-ல், அதாவது பல நரம்புகள் வெளிப்படும் இடத்தில் பல் உருவானதால், இது கடினமான அறுவை சிகிச்சையாக இருந்தது என மருத்துவர்கள் கூறினர்.
இதனை மேலும் விவரித்த மருத்துவர் பிரியங்கர் சிங், "ஆரம்பத்தில், முகத்தை ஒரு புத்தகம்போல் திறந்து அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டோம். ஆனால் பின்னர் நாங்கள் வாய்வழியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். maxillary sinus-ல் உள்ள கட்டி மிக பெரிதாக வளர்ந்து சைனஸ் Wall- உடன் இறுக்கமாக ஒட்டியிருந்தது. அதை மிகுந்த கவனத்துடன் அகற்றினோம்.
பல் வேரை floor of the orbit-லிருந்து அகற்றுவது மிகவும் சவாலானது, ஏனெனில் சிறிய தவறு கூட நோயாளியின் கண் சேதமடையக் காரணமாகி விடும். floor of the orbit-ன் அமைப்பு பாதிக்கப்பட்டால், கண் கீழே சரியும் அபாயமும் இருந்தது. அதனால், அறுவை சிகிச்சையின் போது, floor of the orbit-ல் உடைந்த சிறிய எலும்புகளை, சைனஸைத் திறக்கும் போது அகற்றிய எலும்புத் துண்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் சரிசெய்தோம்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு