You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏர் இந்தியா விமான விபத்து: உடற்கூறாய்வு அறைக்கு வெளியே தவிக்கும் உறவினர்கள்
ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைப் பிரிவுக்கு வெளியே உறவினர்கள் தவிப்புடன் காத்திருக்கின்றனர். அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார் பிபிசி செய்தியாளர் இஷாத்ரிதா லஹிரி.
"நாம் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைப் பிரிவுக்கு வெளியே இருக்கிறோம். தற்போது நள்ளிரவு நேரம், என் பின்னால் இங்கே பரப்பாக உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். விமான விபத்தில் இறந்தவர்களின் அனைத்து உடல்களும் இங்கு கொண்டு வரப்படுகின்றன.
பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பலர் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள், உடல்களை உரிமை கோர காத்திருக்கிறார்கள்.
ஆனால் உடல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற ஒரு பெரிய பிரச்னையை அனைவரும் எதிர்கொள்கிறார்கள். இங்கே டிஎன்ஏ சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆமதாபாத்தைச் சேராத சிலரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமும் பேசினோம்." என கூறுகிறார் இஷாத்ரிதா லஹிரி.
மேலும் விவரங்கள் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு